Tuesday, August 10, 2010

வேர்களைத்தேடி.....



பசுமையான நினைவுகளை மெல்ல மெல்ல உங்கள் கண்முன்னே கொண்டுவரும் ஒரு நிகரில்லா நிகழ்ச்சிகளை இங்கே...........


நாம் சிறுவயதில் பலவிதமான விளையாட்டுக்களை விளையாடி இருப்போம்.அவ்வகையான விளையாட்டுக்கள் இப்போதைய சிறுவர்களிடையே விளையாடப்படுவது மிகவும் அரிதாகவே உள்ளது.மேலும் அவ்விளையாட்டுக்களில் உள்ள ஆழமான கருத்துக்களும் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது.ஆகையால் அவ்விளையாட்டுக்களை நினைவு கூறும் வகையிலும் இன்றைய நம் சமுதாய சிறுவர்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் அனைத்து விளையாட்டுக்களையும் விளக்கமாக இப்பதிவில் வெளியிடுகிறோம்...
பணத்தைத்தேடி நம் பாரம்பரிய சொத்துக்களை இழந்து வரும் நம் வருங்கால சந்ததியினரின் மகிழ்ச்சியின் உறைவிடமான விளையாட்டுக்களை மீண்டும் தட்டி எழுப்பி உயிர் கொடுப்போம்.சிறுவயதில் பிள்ளைகளுக்கு சந்தோசமே விளையாட்டுதான் அந்த விளையாட்டுகளினால் அவர்களிடையே பலவிதமான முன்னேற்றங்களும் பலவிதமான பழக்க வழக்கங்களையும் நாம் காண முடியும்.நாம் இப்போதும் கூட சிறுபிள்ளைகளிடையே பேசும் போது "உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும்" என்று கேட்டாலே போதும் உடனே ...அந்த பிள்ளை அதன் நண்பர்கள் வட்டாரம் மற்றும் அவர்களுடைய விளையாட்டு, அந்த சுவாரஷ்யம் என்று கதை மிக நீளமாக போகும்..ஏனென்றால் அந்த வயதில் அவர்களுக்கு விளையாட்டிலே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.இவை முழுக்க முழுக்க கிராமத்தின் நிழல்கள்...ஆனால் இப்போதைய ந(ர)கரத்து மக்களிடையே எந்த பிள்ளையும் மற்ற பிள்ளைகளுடன் சேருவதும் இல்லை விளையாடுவதும் இல்லை...ஒரு மினி ரோபோ என்றுதான் சொல்லவேண்டும்.
இவ்விளையாட்டுக்களை இப்போது பார்க்கும் போதுகூட மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாகவும் இதமாகவும் இருக்கும்...காரணம் அந்த சிறுபிள்ளைகளின் இதமான பேச்சுக்கள் மற்றும் கொஞ்சும் வார்த்தைகள்...எகா பூப்பறிக்க வருகிறோம்...பூப்பறிக்க வருகிறோம்....என்று ஆரம்பமாகும்...

சிறு பெண்டுகள் விளையாட்டு ...
  • பூப்பறிக்க வருகிறோம்...
  • கோட்டான் கோட்டான்...
  • சில்லு விளையாட்டு
  • டிசம்பர் பூக்கள்
  • பல்லாங்குழி
  • கல்லாங்காய்
  • ஊஞ்சல்
  • ஒருகுடம் தண்ணி ஊத்தி
  • கண்ணாம்பூச்சி (கண்கட்டிப் பிடித்தல்)
  • உப்புகோடு
  • கோ கோ
  • கொலைகொலையாய் முந்திரிக்காய்
  • பரங்கி காய் பறித்தல்


சிறு ஆண் பிள்ளைகளின் ....
  • நாடு பிடித்தல்
  • பேந்தா
  • கிண்டு விளையாட்டு
  • ஏட்டு காசு
  • சடுகுடு (கபடி)
  • கிட்டிப் புள்ளு
  • எறி பந்து
  • கப்பல் விடுதல்
  • போட்டோ எடுத்தல்
  • பட்டம் விடுதல்
  • பம்பரம்
  • தூண்டில்
  • ஓடு உடைத்தல்

ஆண் பெண் இருவரும்....
  • ஆடுபுலி
  • தாயம்
  • கிச்சு கிச்சு தாம்பூலம்
  • திருடன் போலிசு
  • படம் பெயர் கண்டு பிடித்தல்
  • நொண்டி விளையாட்டு
  • ஒளிஞ்சு பிடித்தல்
  • கூட்டாஞ்சோறு




No comments:

Post a Comment

 
Copyright 2009 VadakaduOnlineInfo. Powered by Blogger Blogger Templates designed by vadakaduPoeple